நித்தமும் உன்னை பார்க்க ஏங்கும் மனது 009

கனவுளால் உதிர்த்தெடுத்து கற்பனையால் கவி வடித்து
காலமெல்லாம் உன்னோடு கலந்து
காதோரம் வந்து பேசும் நிமிடத்தில்
நிஜத்திலும் ,கனவிலும்
என்னை புரட்டி புரட்டி புன்னகை வடிக்கிறது!

நித்தம் பார்க்க ஏங்கும் மனம்
கடவுள் சித்தம் என்னவோ !
காலம் தாண்டியே போகிறது

கனவில் பகிர்ந்திடும்
முத்த அமுதத்தின்
எச்சித்துளி கூட இனிக்கிறது!

உன் புகைப்பட உரு என்னைப்பார்த்து கண்ணசைக்கிறது...!
திகைத்தெழுந்து திரும்ப பார்த்தால்
பிரம்மையாகிறது !
இதயத்தில் எத்தனை இடைவெளிகள்
உன்னோடு பேசிக் குலாவுவதற்காக
காத்துகிடக்கின்றது!!


அ க ம ல் தா ஸ்

எழுதியவர் : அ க ம ல் தா ஸ் (19-Apr-14, 5:10 pm)
பார்வை : 214

மேலே