காதல் சுமை

எனது இதயத்தில்
ஏன் இத்தனை கனம்?

இதயங்கள்
இடம் மாறியதாகச்
சொல்லிச் சென்றாயே..

இந்தச்
சுகமான சுமை..!
உன் இதயம்
சுமப்பதால்தானோ..?

அங்குள்ள
என் இதயம்
கண்டபின் தான்
கனம் இலகுவாகும்
என்பதால் ...

விரைந்து வா...
உன்னின் இதயம்
பார்க்க வேண்டாமா...!

எழுதியவர் : மின்கவி (22-Apr-14, 8:54 am)
பார்வை : 204

மேலே