மண்ணில் மறைந்த ஒரு மாமேதை காப்ரியேல் கார்சியா மாக்ஸ்வெஸ்
கார்சியா கூற்றுகள் சில...(தொடர்ச்சி )
3.மிகுந்த உவகையுடன் அவள் ஒன்றைக் கண்டறிந்தாள்:-தனது குழந்தை தன்னால் வளர்க்கப் பட்டது என்பதால் அந்த நட்பே பிரதானம் என்பதால் அவள் தனது குழந்தைகளை அதிகம் ஆசையுடன் நோக்குவதில்லை...(காலரா காலத்திய காதல் )
4. மகிழ்ச்சி குணமாக்கதது எதையும் மருந்து குணப்படுத்துவதில்லை
5.வயதாவதால் எவரும் கனவுகளைத் தொடர்வதில்லை: கனவுகளை விட்டுவிடுவதால் தான் அவர்கள் வயதாகிறார்கள்
6.இந்த திருமணங்களில் உள்ள சிக்கல் என்பதே இரவில் உறவாடி உறங்கி அதை காலை சிற்றுணவுக்கு முன்பாகவே மறு கட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளதுதான்(காலரா காலத்திய காதல் )
7. வாழ்வில் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது பொருட்டல்ல ஆனால் நிகழ்வை நினைவில் கொள்வதும், எப்படி நினைவில் கொள்வதும் என்பதுதான்
8.அவனுக்கு ஆம் என்று சொல்லிவிடு-நீ அச்சத்தில் உறைந்து நின்றாலும்,பிறகு நீ வருத்தப்பட்டாலும்,ஏனெனில் நீ இல்லை என்று சொல்லிவிட்டால் உனது எஞ்சிய வாழ்வு முழுவதும் இல்லை என்று அவனுக்கு நீ சொல்லியதற்கு வருந்தியே தீர வேண்டும்.(காலரா காலத்திய காதல் )
(தொடரும் )