மரணம்

ஒவ்வொரு நொடியுலும் நம்மை தழுவி கொள்ள
விரும்பி காத்திருக்கும் வேண்டாத காதலி
நூலிலையில் நாம் நழுவிக் கொண்டாலும் - நிச்சயம்
துரத்தி வந்து பறித்து கொல்வாள் .
மரணம் நம் பயணத்தின் முடிவல்ல
நம் பாதையின் முடிவு
இறந்த பின் இன்னொரு பாதை தோன்றும்
அதை இறைவன் மட்டுமே அறிவான்.
இருப்பதெல்லாம் எடுத்துக்கொண்டோம்
இயங்குவதெல்லாம் நமக்கென்றோம்
தண்டிப்பது யாரென்று
தவறுகளை கூட்டி கொண்டோம்
இதற்க்குத்தான் மறைத்தான் இறைவன்
மரணத்தின் மறு பக்கத்தை.
நம் தவறுகள் தண்டிக்கபடும்- அங்கே
நம் வேண்டுதளும் வீண் போகும் .
கால புத்தகத்தில் நமக்கான பக்கங்களை
நாமே எழுதிக்கொள்வது தான் இந்த வாழ்க்கை
இறுதி நாளில் நம் வாழ்வே நமக்கு தீர்ப்பாகிறது
தீர்மானிப்போம் நாம் வேண்டுவது சொர்கமா ?, நரகமா ?
மனிதா, மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்
இன்றோடு நம் தவறுகளை திருத்தி கொள்வோம்
இரக்கமுள்ளவன் இறைவன் நம் தீர்ப்பை மாற்றிக்கொள்வான் .