அனுபவம் புதுமை
அனுபவம் புதுமை ..
அனுபவம் உள்ளவனுக்கும் அனுபவம் இல்லாதவனுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்று ஒருவன் நம்பியிருந்தான்.
ஒருநாள் ஒரு முதியவரை அணுகி, அவர் முன் நின்று கொண்டு,
"ஐயா .. வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். அனுபவம் உள்ளவனுக்கும் அனுபவம் இல்லாதவனுக்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா" என்று வினவினான்.
அதற்கு, அந்த முதியவர், "ஆம், இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு" என்றார்.
அதற்கு அவன், "கிடையாது" என்றான்.
அதற்கு முதியவர், "அப்படியா .. சரி .. உன் வலது காலைத் தூக்கு" என்றார். அவனும் வலது காலைத் தூக்கினான். இப்போது வலது காலை இறக்காமல் இடது காலை தூக்கு என்றார். அவனும் தூக்கினான் உடனே பொத்தென்று கிழே விழுந்துவிட்டான். அப்பொழுது அந்த முதியவர் சொன்னார் உன்னால் ஒரு காலைத் தூக்க முடிந்தது போல் இரண்டு கால்களையும் அதுபோல் தூக்க முடியும் என்று நினைத்தது தான் அனுபவமின்மை" என்றார்.

