தவளை கீதம்---அஹமது அலி---

நீர்வாழும் தவளைகள்
நிலத்தோடும் உறவுகள்

இருநிலையில் வீடுகள்
இயற்கை தந்த கூடுகள்

அறிவியலின் கேடுகள்
அழிவை தரும் பாருங்கள்
இது தான் எங்கள் பாடுகள்!
''
''
அந்த நாளில்
குளங்களின் மேலே
குதூகலமாக குதித்திருந்தோம்.....
'
'
பச்சை வயல்களில்
கச்சேரி நடத்தி
பரவசமாக பாடி வந்தோம்....
'
'
உரங்களிலே
ஊட்டிவிட்ட விசத்தினிலே
உயிர் சிறுத்தோம்....
'
'
சுரங்களிலே
சோகங்களை இந்த நாளில்
இசைத்திட்டோம்...
'
'
எங்களினம் அழிந்து விட
என்னாகுமோ மண்ணின் நிலை?
/
/
மழை வேண்டி
மன்றாடி கேட்போம்
கொர் கொர்ரென சப்தத்திலே.....
'
'
மழையின்றி
மல்லாந்து மடிவோம்
மண் தாங்கா வறட்சியிலே.....
'
'
சிறு கொசுக்களை
சிற்றுண்டியாய்
விரும்பியே சுவைத்திடுவோம்....
'
'
பெரும் நன்மைகள்
பெறும் மனிதனால்
பேரழிவை சந்தித்தோம்...
'
'
அவனுணவு நாமாகி
அழியும் காலம் வந்ததுவே..!.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (28-Apr-14, 7:45 am)
பார்வை : 175

மேலே