நாய்ச் சுதந்திரம்

சுதந்திரம் என்ற பெயரில்
நகர்வளம் வருகிறது...

கம்பத்தில் கால் தூக்கினால் ஒரு இழு...
சாணத்தை முகர்ந்தால் ஒரு இழு..
ஓடினால் இழு... உட்கார்ந்தால் இழு..
இழுத்து இழுத்து.....
கழுத்து ஓடிந்ததுண்டு....
இழுத்த கைகள் ஓடிந்ததில்லை..

இங்கு சுதந்திர நாய்கள் இரண்டே வகை தான்
குட்டைச் சங்கிலி நாய்களும்!!
நெட்டைச் சங்கிலி நாய்களும்!!

எழுதியவர் : ந.நா (28-Apr-14, 2:04 pm)
பார்வை : 105

மேலே