அவள் எனக்கு வேண்டும்-8

“மாப்ள ஒரு விஷ‌யத்தை உங்ககிட்ட சொல்றேன். அந்த சிவா! என்னோட தங்கச்சி மகன்”, என்றார்.

“மாமா! என்ன சொல்… சொல்றீங்க….!!!” என்று இழுக்க….

“ஆ.. ஆமா… மாப்ள..”

“என்னோட தங்கச்சி.. என் நண்பண காதலிச்சி கல்யாணம் செய்துகிட்டா..

இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்தவுடன்.. எங்க அப்பா அம்மா
உயிர விட்டுட்டாங்க‌.. மானப் பிரச்சனையாயிற்றே இந்த விஷயம்…

அவங்க இரண்டு பேரும் பயந்துக்கிட்டு ஊர விட்டு போய்ட்டாங்க..

நானும், அவனோட அப்பா, அம்மாவும் என்ன செய்ரதுன்னு தெரியாம
நின்னோம்... கொஞ்ச நாள் கழிச்சு.. நானா தான் அவங்க‌ வீட்டுக்கு போனேன்.. போய், எப்போதும் போல அவங்க அப்பா அம்மாக்கிட்ட பேச ஆரம்பிச்சேன்.. எல்லா விஷத்தையும் மறந்து சகஜமா ஆனாங்க.. அன்னேலேயிருந்து எல்லா விஷயத்தையும் அவங்ககிட்ட தான் சொல்லுவேன்.. என்னோட அப்பா அம்மாவா தான் இப்பவும் நினைச்சிக்கிட்டு இருக்குறேன்.. அது யார் தெரியுமா? இப்போ இருக்குற இந்த பாட்டி தாத்தா தான்..

அவங்க‌ கொஞ்ச நாள் கழிச்சி, எனக்கு உங்க அக்காவ பெண் பார்த்து திருமணம் முடிச்சி வச்சாங்க.. இந்த‌ ஊருல என்னையும் ஒரு மனுசனாக்குனாங்க..

அவங்க பையன்.. அதான் சிவாவோட அப்பா.. என் நண்பன்.. எப்போவாவது வருவான்.. யாருக்கும் தெரியாம போயிடுவான்... என்னோட தங்கச்சியும், சிவாவும் இங்கு வந்ததில்லை... சிவாவுக்கு இந்த விஷயமும் தெரியாது... உங்க அக்காவுக்கும் என் பொண்ணுங்களுக்குமே இது தெரியாது.. ஒரு நாள் பாட்டியும்.. தாத்தாவும் எங்கிட்ட கேட்டாங்க.. சிவாவுக்கு கோமதிய கட்டிக்குடுப்பியான்னு.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல...

ஆனா சிவா ஒரு டாக்டர்! சொந்தத்துல கல்யாணம் செய்வது தப்புன்னு
அறிவுறுத்துவான்னு தங்கச்சி சொல்வதா பாட்டி சொன்னாங்க‌..
கல்யாணத்துல விருப்பம் இல்லாம.. எப்போதும் ஆஸ்பத்திரியிலேயே
இருப்பதாக‌ சொல்லி அழுவாளாம்... இதெல்லாம் தாத்தா வந்து என்னிடம்
சொல்வார்.

நானும் அவரும் சேர்ந்து முதலில் சிவாவை எப்படியாவது இங்கு வரவழைப்பது.. அப்புறம் எப்படியாவது திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பது என்று...

அதுக்குள்ள எதார்த்தமா கோமதிய பார்த்த சிவா, பாட்டிக்கிட்ட கோமதிய கல்யாணம் செய்து வைக்க சொன்னாராம்.."

வந்ததில் இருந்து எல்லாவற்றையும் சொல்லி முடித்தார் கோமதியின்
அப்பா.

“என்ன மாப்ள ஒன்னும் சொல்லமாட்டேங்கறீங்க?”, என்றார்.

“என்ன மாமா சொல்றது… உங்க தங்கச்சிய நண்பனே திருமணம் செய்ததும்.. அதுக்கப்பறம் எவ்வளவோ வேண்டாத விஷயங்கள் நடந்தும்.. அவங்க அப்பா அம்மா துணையோடு இன்னைக்கும் நீங்க நடக்கும்போது.. சொல்ல வார்த்தையில்ல மாமா”, என்றான்.

“ம் ம் திருமணம் எப்போ?”, என்றான்.

“சொல்றன் மாப்ள.. கொஞ்சம் பய‌மாவும் இருக்கு. திருமணம் முடிந்து
சிவா கோபப்பட்டா”, என்றார்.

“அதுக்கென்ன மாமா.. சொல்லிக்கலாம். நீங்கதான் சொந்தம்ன்னா
வேண்டான்னு சொல்ற ஆளாச்சே.. அதான் சொல்லவில்லை என்று”,
என்றான்..

“ம் ம்”

“இன்னொரு விஷயம் மாப்ள… என்னோட தங்கச்சிக்கும் தெரியாது.. கோமதி என்னோட பொண்னுன்னு”, என்றார்.

அங்கு வீட்டில் பாட்டியும் தாத்தாவும் சிவாவிடம்,

“சிவா! தாத்தாவுக்கு உன்னோட விஷயம் தெரிந்து விட்டது”, என்று பாட்டி சொல்ல,

தாத்தா சிவாவிடம்,

“இங்க வா”, என்றார்.

“என்ன தாத்தா?”, என்றான்.

“நீ சின்ன பையன் இல்ல.. நான் உங்கிட்ட ஒன்னு சொல்லவா!”

“சொல்லுங்க”, என்றான்.

“கோமதிய நல்லா பார்த்துப்பியா” என்றார்.

சிவா மௌனமாக சிரித்தான்.

“சரி சரி! நான் உங்க மாமாட்ட பேசுறேன்”, என்றார்.

“ம்.. என்ன தாத்தா?”, என்றான்.

“அதான் உங்க மாமனார்கிட்ட” என்றார்.

(தொடரும்)

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (28-Apr-14, 9:38 pm)
பார்வை : 617

மேலே