அந்த வண்டிங்க

மனைவி ;என்னங்க மாட்டு வண்டி மாறி ஓட்டிட்டு வரீங்க ?

கணவன்;என்னடீ பண்றது ?பெட்ரோல் விலை கட்டுப் படியாகல...

மனைவி;என்னங்க வண்டி தட தடன்னு சத்தம் கேக்குது ?புகையா வேற வருது ....

கணவன்;சத்தம்போடாத?..மண்ணெண்ணையும் சாராயமும் கலந்து ஊத்தினா அப்டிதான் சத்தம் வரும்..

மனைவி;ஐயையோ! இந்த மனுஷனுக்கு என்னாச்சு?
இந்த மனுஷன் எங்க போய் விடப் போறாரோ?
கடவுளே?

கணவன்; முணுமுணுக்காம சும்மா இருந்து தொலை . யார் காதிலாவது விழப் போகுது ?

வண்டி; டம் டம் டம் ....ம் ....ம் ...ம் டமார் !!!!

மனைவி;அய்யோ! என்னாஆஅங்க நீங்க எங்க இருக்கீங்க

கணவன்;.இதோ வரேன் ..வா வா ஓடிறலாம் ...

மனைவி; இந்த வண்டிங்க

கணவன்; அது இங்கேயே கிடக்கட்டும் வண்டிக்காரன் எடுத்துக்குவான்... ஓடிவா !

??????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (29-Apr-14, 5:16 pm)
பார்வை : 257

சிறந்த நகைச்சுவைகள்

மேலே