வாழ்க்கை வளமாக நல்ல மனம் போதுமடா

பெற்றவர்கள் கேட்க்கும் பணம் திருட்டுபோகும்
என்று பயந்துதினம் பேழைக்குள் அடைப்பதற்கும்
நிலையில்லா செல்வம் வேண்டி நிம்மதியை இழப்பதற்கும் எதற்காக திருமணம்...

கட்டிக்கொள்ளும் பட்டுடுத்தும் அள்ளிபோடும்
நகைஅணிந்தும் களட்டிடாமல் வாழும்வரை
படுக்கையிலே பசியின்றி படுக்கமுடயுமா?

மானம் மறைக்க உடை இருந்து மனைவி
என்றறிய சிறுதாலி கொண்டும் தஞ்சம் கொள்ள
ஒருமனமிருந்தால் தரணியையும் ஆண்டிடலாம்...

ஆணொருவன் காசுகொடுத்து யாருமறியாது
பெண்ணுடலை தொட்டுபடுத்தால் அவளுக்கு
விபச்சாரி என்ற வேசி பட்டமென்றால்..

ஊரறிய வரதட்சணை கொடுத்து வாழும்வரை
ஆணுடனே வாழ்க்கை நடத்த அவனுக்கு
என்ன பட்டம் என்று நான் எழுதுவேன் என்மனதில்..

வாழ்கையில் நிம்மதியை தொலைத்துவிட்டு
சிறுநேர சுகம் தேடி போகும் ஆணின் மனம்
பெண்ணிற்கு காசுபணம் கொடுக்கும்போது..

வாழும்வரை ஒருவனுக்கு மட்டும் என்று
சுகத்தோடு பணிவிடைகள் பலசெய்யும்
மனைவிக்கு கோடிவிலை கொடுக்க முடிமா?

பெண்ணொருத்தி விரும்பி அவள் கொண்டுவரும்
செல்வம் அது ஆண்விட்டில் வாழுவதற்காக
சீதனம் என்று அவள் கணவனுக்கு கொடுக்கும்'பரிசு..

ஆண்வீட்டில் வரதட்சணை என்று கேட்கும் செல்வம்
யாவும் மாப்பிள்ளையை பெண்வீட்டில் விற்கும்
முன்பு வளர்த்த கடமைக்காக வாங்கும் விலை..

ஆண்மகனே விளித்துகொள்டா கோடிரூபாய்
கொண்டுவந்தும் பெண்ணொருத்தி குணமில்லை
என்றால்உன்வாழ்க்கை செழிப்பதில்லை நிம்மதியால்

குணம் கண்டு மனம் ஒன்றி வந்த வாழ்வை
கோடி பணம் கொண்டு பெற்றோர்கள் பிரிக்க நினைத்தால் நீயும் சொல்லு..

உன்னை பெற்றவளின் தாய் வீட்டாரிடம்
கோடியில் பாதியை மொத்தமாக வரதட்சணை
என்ற பெயரில் வாங்கிவர அவளும் பெண்தானே....

விளித்துகொள் மானிடா......!!

வரதட்சணை கொடுக்கமுடியாமல்
50விழுக்காடு பெண்கள் வாழ்வு இழக்கின்றனர்..

வரதட்சணை கொண்டுவந்த ஆணவத்தில்
30விழுக்காடு பெண்கள் வாழ்வை சீரளிகின்றனர்..

20விழுக்காடு பெண்கள் மட்டுமே செல்வத்தை
சீதனமாய் பெற்றோர் மனமகிழ கொண்டுவந்து
வாழ்க்கையினை சிறப்பாக வாழ்கின்றனர்
அதில் ஒருவள் தானோ உன் தாயும்..

ஆண்மகனே உன் மனம் இரங்கினால்
பெண்ணை பெற்றோர் மனம் மகிழ்வார்கள்..
வரதட்சணை என்றகொடுமையும்
நம் இந்திய திருநாட்டில் இருக்காது..


.....கவிபாரதி.....

எழுதியவர் : கவிபாரதி (30-Apr-14, 6:47 am)
பார்வை : 454

மேலே