உன் மௌன மொழி

எனக்குள் பூத்த
முதல் வாலிப
பூவைகொய்தவள் நீயடி

நீ பார்க்கும் திசையில்
உள்ளதடிஎன் வசந்த
காலத்தின் அபூர்வ உலகம்

உலகை ஆள வந்த சூரியன்
உலகுக்கே அவன்
ஒருவனே சூரியன்

என் ஆண்மையை ஆள வந்த
சூரியன் நீயடிஎன் ஆண்மைக்கு
நீ ஒருத்தியே சூரியன்

என் ஆண்மைக்குள்
புதைந்திருக்கும்பெண்மையை வெளிக்
கொண்டுவந்தவள் நீயடி

உன் அன்பையும் பாசத்தையும்
கொடுத்து-என்னைஉன் காலடியில்
மன்டியிட வைத்து விட்டாய்

யாருக்கும் அடங்காத வாலிப திமிர் உண்டு
என்னிடம் யாவருக்கும் அடங்கி பழகும்
மன பக்குவத்தைகண்டேன் தன்னிடம்

பெண்னின் பார்வை பட்டால் ஆணின் வாழ்க்கை
சூத்திரம் மாறிவிடும் போல...
உன் பார்வை பட்டதும் என் வாழ்க்கை சூத்திரம்
மாறியது ஆலம் விழுது போல...

என் தாயின் செல்ல அதட்டல் மொழியை விட
உன் காந்த கன்களின் மௌன மொழி மிரட்டல்
சுகமானது.....!!!

ப்ரியமுடன்....
லெட்சுமி நாராயணன்

எழுதியவர் : லெட்சுமி நாராயணன் (1-May-14, 12:24 am)
Tanglish : un mouna mozhi
பார்வை : 113

மேலே