தொழிலாளி

உதிரத்தை வியர்வையாக்கி
வியர்வையை உரமாக்கி
மண்ணை பொன்னாக்கும்
வித்தை தெரிந்தவன்
தொழிலாளி

மழை வெயில் பாராது
அலை கடல் பாராது
உப்பு நீரில் முத்து சுமப்பவன்
தொழிலாளி

பட்ட மரத்தில்
பச்சையம் சுரக்கவைப்பவன்
வெடித்த நிலத்தில்
வேர்பிடிக்க வைப்பவன்
இந்த தொழிலாளி

கயிற்று கட்டிலில்
கனவு காண்பவன்
படுத்தவுடனே உறக்கம் கிடைப்பவன்
கூட்டி கழித்து
வாழ்க்கை செய்பவன்
சொத்தே இன்றி
சுகம் காண்பவன்
இந்த தொழிலாளி

நாளுக்கு ஒரு சட்டையென
சட்டைக்கு ஒரு வாசமென
சந்தி காட்டி திரியாதவன்
வியர்வையை வாசமாக்கி
விண்ணை மண்ணையும்
பொழிய வைப்பவன்
இந்த தொழிலாளி

இன்றைக்கும் என்றைக்கும்
தொழிலாளி வாழ்க
என் தோழமையே
நீயும் வாழ்க

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (1-May-14, 2:55 pm)
Tanglish : thozhilaali
பார்வை : 191

மேலே