அவள் எனக்கு வேண்டும்-10

திருமணம் பயம்மா இருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டான்.

விடிந்தது... திருமணம் முடிந்தது.

கலகம் இல்லாத கல்யாணமா..!!! எப்படி முடியும்?!??!...

ஒரு பக்கம் பாட்டில் பத்தவில்லை… இன்னும் போய் வாங்கி வா என்று கத்தல்.

இன்னொரு பக்கம் குழம்புல கறியே காணல என்ற சத்தம்.

இன்னொரு பக்கம் கணேசன் அசத்திட்டாருப்பா... சைவ சாப்பாடு.. அசைவ சாப்பாடு.. இரண்டும் போட்டு கலக்கிட்டாரு... என்ற சத்தம்.

பெண்களில் ஒரு சிலர் எப்படி அண்ணே எல்லா கல்யாணத்துலயும் நீங்க‌
போடுற பாட்டு எல்லாம் அவ்வளவு அருமையா இருக்கு என்று சவுண்ட் சர்வீஸ் காரரிடம் கேட்டுக் கொண்டே நடக்க.... வீட்டின் பெரியவர்கள் அனைவரின் ஆசிர்வாதத்தையும் வாங்கிக் கொண்டு இருந்தனர் தம்பதியினர் இருவரும்.

ஊர் பெரிய மனிதர்கள் வந்தனர்.

“டாக்டர் தம்பி! எப்படியோ மாமன் பொண்ணையே கட்டிக்கிட்டீங்க. கோமதி
தங்கமான பொண்ணு... கண் கலங்காம பார்த்துக்கோங்க”, என்றனர்.

அவன் புரியாமல் அப்பாவை பார்க்க, அவளும் புரியாமல் அவனைப் பார்க்க..அவர் அவரின் அப்பாவை தேடினார்.

அதற்குள் அங்கு தாத்தா வந்து விட, நடந்த விஷயத்தை பாட்டியும்
தாத்தாவும் ஒன்றுவிடாமல் சொன்னார்கள்.

“உனக்கு கோமதியை பிடித்திருக்கிறது என்று நீ என்னிடம் சொன்ன பிறகு தான் சிவா, நான் திருமணத்துக்கு ஏறபாடு செய்தேன்”, என்று பாட்டி கூறினாள்.

“ஆயிரம் பொய்யில் நான் ஒரு பொய் தானேடா சொன்னேன்”, என்றாள்.

அவன் கோமதியை தேடினான்.. அவள் அங்கு இல்லை.

கோமதி அவள் அம்மாவிடம் போய் கேட்டுக்கொண்டிருந்தாள்.. அவளுக்கும் ஒன்றும் புரியாமல் கணவனைத் தேடிகொண்டிருந்தாள்..

அதற்குள் கோமதியின் அப்பாவும் அங்கு வர

நேராக ரூமுக்கு சென்றவன் அவள் குமுறி குமுறி அழுது கொண்டிருந்தது
கண்டு வேகமாக வெளியேறினான்.

அப்பா பின்னாலேயே ஓடி வந்தார். அவன் எதையும் காதில்
வாங்கிக்கொள்ளாமல் வேகமாக காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

பின்னாலேயே கோமதியின் மாமா அம்மாவின் தம்பி காரை எடுத்துக்கொண்டு சென்றான்.

சிவா நேராக வீட்டுக்குதான் சென்றான்.

இவனும் போய் பக்கத்தில் அமர்ந்தான். இவனை சிவா பார்க்க,
“சிவா! உங்க கொள்கையை நாங்க உடைத்ததென்னவோ உண்மைதான்..
ஆனா உங்களுக்காக இந்த குடும்பமே தவித்ததே.... ஒரே பேரன் அவனுக்கென்று ஒருத்தி கிடைக்கமாட்டாளா!, என்று உங்கள் பாட்டி எத்தனை நாள் கண்கலங்கி இருக்கிறார்கள் தெரியுமா?”,

என்று அவன் பேசிக்கொண்டே போக‌

அவன் எதையும் காதில் வாங்காமல், “நான் ஊருக்கு போறேன். இத
எங்கப்பாட்ட‌ சொல்லிடுங்க”, என்று சொல்லி, அவன் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் சென்றுவிட்டான்.

ஒரு வாரம் ஓடிவிட்டது அவன் வரவில்லை.

சிவாவின் அம்மாவும் அப்பாவும் கிளம்பினார்கள்.

சிவாவின் அம்மா தன் அண்ணனை நோக்கி, ”நிச்சயமா இந்நேரம் அவன்
கோபம் கொஞ்சம் தனிஞ்சி இருக்கும்.. நான் பார்துக்கிரேன். அண்ணே நீங்க
கவலை படவேண்டாம்”, என்று சொல்லி கிளம்பினார்கள்.

வீடு பூட்டி இருந்தது. இவர்களிடம் ஒரு சாவி இருந்தது.

கொஞ்ச நேரத்தில் சிவா வந்துவிட்டான்.

அப்பாவை பார்த்ததும், கொஞ்சமாக புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றான்.

அம்மா காபியுடன் வரவும், அவன் கண்கள் யாரையோ தேடியது கண்டு
அப்பாவே சொன்னார்,

“யாரும் வரவில்லைப்பா”, என்றார்.

“ஏன் என் கோமதி எங்கே?” என்பது போல இருந்தது அவன் பார்வை.

“உனக்கு பயந்து கொண்டு, அவள் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.
தவிர படிப்பதற்கு கோமதியின் அப்பா அவளை ஆஸ்டலில் சேர்த்துவிட்டார்”,
என்றார்.

அவன் அப்பாவை பார்த்து, “நீங்கள் அழைத்து வந்திருக்கலாமே. இங்கே
இருந்து படிக்க வேண்டியது தானே”, என்றான்.

“நீ நீ என்ன சொல்வாயோ!” என்று அம்மா இழுக்க...

ஏன் இத்தனை பேரும் ஆளாளுக்கு பேத்திக்காக, தாத்தா பாட்டியும்
நண்பனின் மகளுக்காக அப்பாவும் சேர்ந்து நடிக்கும் போது, நான் மட்டும்
என்னவிதி விலக்கா என்பது போல் இருந்தது அவன் பார்வை.

“அப்பா நான் போய் அழைத்து வரவா”, என்று அவன் கேட்க எப்போதுமே
இப்படிதான் இவன் பட்டென்று பேசுபவன்.

“வேண்டாம்ப்பா.. உனக்கு சம்மதம் தானே”

“ம் ம்”, என்று புன்னகை பூத்தவனை அம்மா ஓடி வந்து ‘சிவா!’ என்று கையை பிடித்துக்கொண்டார்.
(தொடரும்)

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (2-May-14, 10:36 am)
பார்வை : 539

மேலே