இப்ப நான் என்ன செய்ய

இப்ப நான் என்ன செய்ய
படிச்சி படிச்சி சொன்னேனே
பலமுறை உன்னிடம் சொன்னேனே
எண்ட கதையை கேட்காம
நீயும் நாசமாய் போயிட்டியே

படுத்த படுக்கையா கிடக்கிறியே
சோறு தண்ணி இல்லாம இருக்கிறியே
எழும்மி நடக்க இசக்கமில்லாம
கண்ணீர் மட்டும் வடிக்கிறியே

உழைச்ச காசயெல்லாம்
கல்லு வாங்கி கரைச்சியே
சட்டி பானை வித்து
சாராயமாய் மாத்தினியே

போன இடமெல்லாம்
போதையாகி கிடந்தியே
போற வாறவனெல்லாம்
ஒருமாதியாய் பேச
நீயும் வாழ்ந்தியே

குடல் வெந்து அறுந்துபோக
கல்லீரல் கரைந்துபோக
இறைப்பையோ இறந்துபோக
விடிய விடிய குடிச்சியே

ஒண்டுக்கு ஆறாக
என் வயித்தில தந்தியே
பெத்தத நடு வீதியில விட்டுட்டு
நீயும் போகப்போறியே

இத்தனைக்கும் உன்ன நம்மி
வந்த நான்
அணு அணுவாய் சாகுறேனே .....
இப்ப நான் என்ன செய்ய

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (2-May-14, 3:03 pm)
பார்வை : 103

மேலே