நெல்லி உண்போம்

காயகற்பகனி என்று சித்தர்களால் அழைக்கப்படுவது நெல்லி. நெல்லிக்கனி பழம்பாடல்களிலும் இலக்கியங்களிலும் கூட இடம் பிடித்துள்ளது... அதியமான் அவ்வை கதை நாம் அனைவரும் அறிந்ததே. மலை நெல்லி எனப்படும் பெரிய நெல்லி மிகவும் பலனுள்ளதாகும். நெல்லயில் அநேகமான தாதுக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன. அஸ்கார்பிக் அமிலம் எண்ணப்படும் வைட்டமின் சி நிறைந்தது நெல்லி.
பொதுவாக நிறையப்பேர் நெல்லி இரவில் சாப்பிட்டாலோ, மழைக் காலத்தில் சாப்பிட்டாலோ சளி பிடிக்கும் என்ன நினைக்கின்றனர். சிறிய நெல்லயில் டர்டரிக் அமிலம் உள்ளது எனவே சிறு நெல்லியை சாபிட்டால் தான் சளித் தொல்லை உண்டாகும். மலை நெல்லி மிகவும் சிறந்ததாகும். இது உண்டுவர எண்ணற்ற பலன்கள் உண்டு.கொழுப்புச்சத்து மற்றும் சோடியம் நெல்லயில் மிக மிகக் குறைவே. வைட்டமின் ஏ மிகுதியாக உள்ளது. இதோ போக சிறு தாதுக்களான ;கால்சியம், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவைகளும் உடல் செயலிகளுக்கு தேவையான அளவு நெல்லயில் உள்ளது. நல்ல கண்பார்வைக்கும், தோல் வளர்ச்சிக்கும், தலை முடி வளர்ச்சிக்கும் நெல்லி அருமருந்தாகும். மேலும் நவீன ஆய்வுகள் நெல்லயில் புற்றுநோய் தடுக்கும் வேதிபொருட்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. தினமும் ஒரு நெல்லி உண்டு வர நம் உடலில் நோய் தடுப்பாற்றல் அமோகமாக இருக்கும். இன்னும் ஒரு விஷயம் என்னுடைய தனிப்பட்ட அனுபவம், அது என்னவென்றால், பொதுவாக வைரஸ் காய்ச்சல் உள்ளவர்கள் நெல்லி சாப்பிட நோய் தடுப்பாற்றல் பெருகி விரைவில் குணமடைவர். நவீன மருத்துவத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து கிடையாது, நாம் மருத்துவரிடம் சென்றால் அவர் கொடுக்கும் மருந்துகள் வெறும் காய்ச்சலின் வீரியத்தினை குறைப்பதற்கேயன்றி அது வைரசை அழிப்பதில்லை. வைரசை அழிக்க நமது செல்லானது இண்டர்பிரோன் என்னும் புரதத்தை சுரக்கும், இதுவே பல்வேறு செயலியல் மூலம் நோய்க்கிருமிகளை அழிக்கிறது. எனவே காய்ச்சல் வந்தால் (மிகவும் கொடிய தோற்று அல்லாத காய்ச்சல்) சத்தான பழங்கள் மற்றும் உணவு உண்டாலே அது விரைவில் சரியாகிவிடும். இதற்கு நெல்லி ஒரு மிகச்சிறந்த மருந்து. ரத்தசோகை என்னும் உதிரப்பற்றாகுறையை நெல்லி நீக்க வல்லது. மேலும் அடிக்கடி தலை முடி உதிர்வது, வயதானதை போன்ற தோற்றமளிப்பவர்கள் நெல்லி உண்டுவர அவர்களது தோற்றத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். மேலும் நெல்லயில் நார்ச்சத்துகள் அதிகமாக இருப்பதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கவல்லது. பல்லில் உயிர்ச்சத்து குறைவால் ரத்தம் வருவது (scurvey) போன்ற பிரச்னை உள்ளவர்கள், நெல்லி உண்டுவர ஓரிரு நாட்களிலையே நல்ல பலன்களை காணலாம். நெல்லியை அப்படியே சாப்பிடலாம், அல்லது சாறுபிழிந்து தேன் கலந்தும் சாபிடலாம். அதன் துவர்ப்பு சுவை பிடிக்காதவர்கள் துவையல் செய்தும் சாப்பிடலாம். நெல்லி சமைக்கும் போதும் சத்து குறையாத ஒரு கனி. நெல்லி அடிக்கடி கிடைக்காதவர்கள் கிடைக்கும் பொது வாங்கி வெந்நீரில் கழுவி, அதை வெய்யிலில் காயவைத்து, காய்ந்த பின்பு அதன் விதைகளை நீக்கி (காய்ந்த நெல்லயில் விதை எடுப்பது எளிது) பின்பு பத்திரப்படுத்தி வைக்கலாம். இதை நெல்லி முள்ளி என்பர். பின்பு இந்த முள்ளியை பயன் படுத்தலாம். குழந்தைகளுக்கு நெல்லியை ஊறுகாயாகவும், வற்றலாகவும், இல்லை சாதத்திலும் (நெல்லிக்காய் சாதம்) செய்து கொடுக்கலாம். நெல்லி மகத்துவம் மிக்கது. மிகச் சிறந்த மருந்து. தினமும் நெல்லி உண்டு வர நோய் நம்மை அணுகாது. எனவே தினமும் ஒரு நெல்லி உண்போம். நல்ல உணவுப்பழக்கங்களை நம் குழந்தைகளுக்கும் சேர்ப்போம். இயற்கை உணவின் மகத்துவத்தை அறிவோம். இதை படிக்க நேரம் ஒதுக்கிய நண்பர்களுக்கு நன்றி. - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தரராஜன் (3-May-14, 11:24 am)
சேர்த்தது : சௌந்தர்
பார்வை : 360

மேலே