கடைசி ஆசை

காதல் என்னை தூக்கிலிட்டது... இதோ
அவள் நினைவெனும்
தூக்கு மேடையில் நின்ற படி , என்
இதயம் பேசுகிறது ...!

அட, இன்னொரு ஜென்மமொன்று
இருந்தால் என்னவளின்
ஆறாவது விரலாய் நான்
பிறக்க வேண்டும் ...!

ஏனெனில்..,

இப்போது அதிர்ஷ்டமில்லா என்
காதல் அடுத்த
ஜென்மத்திலாவது அதிசியப்
பிறவியாய்
பயணிக்கட்டும் அவளுடனே ..!

எழுதியவர் : தாமு (3-May-14, 1:22 pm)
சேர்த்தது : தாமோதரன்
Tanglish : kadasi aasai
பார்வை : 74

மேலே