ஒருமுறை செய்த தவறு வாழ்வின் முடிவு 555
அவன்...
தினந்தோறும் கதிரவன்
உதிக்கிறான்...
அவன் அருகில் அவன்
மனைவியின் முகம்...
அதிகாலை மெல்லிசை
பாடல்...
அவன் மழலையின்
கொஞ்சும் தமிழ்...
கூந்தல் முழுவதும்
மல்லிகை...
முகமெங்கும் கலங்கமில்லா
புன்னகை...
கைகளில் தேநீருடன்
முகத்தில் புன்னகையுடன் ...
தினம் எழுப்புகிறாள்
அவனை...
இவன் மனம் தினம் அழுவதை
அவள் அறிவாளா...
வீட்டில் தினம்
உணவுன்டாலும்...
உணவகத்தில் ஓர்நாள் உண்ண
ஆசைகொண்டான்...
பால்வினை நோய்
தொற்றி கொண்டு...
இவன் குருதி
எண்ணையாய்...
எலும்புகள் விறகாக
எறிவதி இவள் அறிவாளா...
ஊர்தான் அறியுமா...
அன்போடு அவள் நெருங்கும்
போதெல்லாம்...
தினம் ஒரு
காரணங்கள் சொல்லி...
விலகி உறங்குவது
அவள் அறிவாளா...
தினம் மனதுக்குள்
அழும் அவனை அறிவாளா...
இவன் உடல் தினம்
கருகிகொண்டு இருபது
யாருக்கு தெரியும்...
சந்தோசத்தையும் துக்கத்தையும்
ஒன்றாக கொடுத்தான் இறைவன்...
அவள் மனைவியாய்
இவனுக்கு அமைந்தது...
சந்தோசம்...
அவளுக்கு இவன்
கணவனாய் அமைந்தது...
துக்கம்...
இறைவனிடம்
கேட்கிறான் தினம்...
இவனை
அழைத்துக சொல்லி...
இல்லையேல் மறுஜென்மத்தில்
பெண்ணாக பிறக்க நினைக்கிறான்...
இவன் மனைவிக்கு
மகளாக...
ஒருமுறை
செய்த தவறு...
வாழ்வின் முடிவு.....