வேடிக்கை பார்ப்பவன்

என்ன உலகமடா இது
எப்படிப்பட்ட மனிதர்களடா இவர்களென
வெந்து போகுறாயா
வேதனை ஆகுறாயா

பதற்றங்களை
பற்ற வைப்பார்கள் உன்னில்
பதற்றங்களும்
பற்றி கொள்ளும் உன்னில்
பதற்றங்களோடே
பயணப்படுவாய் வாழ்வில்

மாற்றங்களை ஏற்ப்படுத்த
மார்தட்டி நின்று
மண்டியிட்டே போவாய்

ஏற்றங்களை ஏற்ப்படுத்த
ஏறு கொண்டெழுந்து
ஏமாற்றங்களையே ஏந்திகொள்வாய்

பலன் ஏதுமில்லை
நிம்மதியை தொலைப்பாய்
நித்திரையை தொலைப்பாய்
நிதர்சனம் இதுதான்

சுகங்களை தொலைத்து
சுமைகளை ஏந்திக் கொள்வாய்
கணப் பொழுதெல்லாம்
கவலையோடே ஒட்டியிருப்பாய்

வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
வேடிக்கை உலகமடா இது
வேடிக்கை மனிதர்களடா இவர்களென
வேடிக்கை பார்ப்பவனாய் இரு
வெந்து தணியும் எல்லாம் . . . .

எழுதியவர் : sarvaki (5-May-14, 10:28 am)
சேர்த்தது : sarvaki
Tanglish : vedikkai paarpavan
பார்வை : 391

மேலே