காதல் கவிதை

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..


அன்புள்ள மனைவியே
இன்னும் உன் நினைவால் வாடும்
உன் கணவன் எழுதும் மடல் இது...!

உன்னோடு வாழ்ந்த
அந்த கொஞ்ச நாட்களை
நானும் தினமும்
மீட்டிப்பார்க்கிறேன் ....
மீட்டிப்பார்க்கும் போது
வரும் கண்ணீரை துடைக்க
ஆளின்றி நானும் தவிக்கின்றேன்

காதலித்த
நாம் ஒன்றாய் சேரும் போது
நம்மை வாழ்த்த
உன்னோட குடும்பமும்
என்னோட குடும்பமும்
வராத போது
நீ கூறிய அந்த வார்த்தைகள்
'நாம ஒண்டா நூறு வருசம் வாழனுமுங்க '
தினம் நெஞ்சில் முள்ளாய் குத்துதடி ...

என் மடியில் படுத்து கொண்டு
உன் உயிர் உன் தொண்டைக்குழியால்
பிரிகையில்
நீ என் கைகளை இறுக்கி பிடித்து
உன் கண்கள் கலங்கியது
தூக்கத்தில் கனவாய் தோன்றி
தினம் என்னை கொல்லுதடி

என் துன்பத்தை சொல்ல
இங்கு நான் நாதி அற்று கிடக்கையில்
உன் அப்பன் வந்து கேட்கிறான்
'என் மக கொண்டு வந்த அந்த 4 பவுன் சங்கிலி எங்க'
இதற்கு நான் என்ன பதில் சொல்ல
என் மனைவியே .....?

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..

எழுதியவர் : நபில் அஹ்மத் (6-May-14, 11:14 pm)
பார்வை : 120

மேலே