தற்கொலை
தன் உயிர்க் கிழங்கை தானே
வேரோடு கிள்ளி எறிந்தாள்
விதிக் காற்றிலே
அலைமோதி எரியும்
தன் உயிர் வர்த்தியை
ஊதி ஊதி அணைத்தாள்
வாழ்வே இருட்டானதென்று
தன்னையே எரித்தும் பார்த்து
கருகிப் போனாள்
பூ தூங்கும் மரக் கிளையில்
தானும் தூங்கவோ
தூக்கிலிட்டாள்
அங்கயற்கண்ணி