ஆறே அலறித் துடிக்குது - நேரிசை வெண்பாக்கள் 34

வெளிச்சமில்லா ராவிலும் வேகமாய் வண்டி
துளிக்கூட ஓசையின்றி தூங்கா - தெளிதில்
அடிக்கும் மணல்கொள்ளை ஆறே அலறித்
துடிக்குது வாடாதோ நெஞ்சு! 3

மனிதமே இல்லா மணற்கொள்ளை தானே
தனிமனி தர்க்கரசே தந்தால் – இனிநிலவைக்
கண்டுதான் என்றும் களித்திட காதலர்க்கு
உண்டோ மணற்படு கை! 2

சுழலும் மணல்வண்டிச் சக்கரத்தில் ஒட்டி
விழுந்து சிதறிய மண்தான் - பழுதாக்க
கண்ணில் மணல்தூவும்! கண்மூடும் நேரத்தில்
வண்டியும் செல்லும் விரைந்து! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-May-14, 12:47 pm)
பார்வை : 66

மேலே