மனமே மயங்காதே

மனமே மயங்காதே ஒரு மாற்றம் உருவாகும் !
கனவே காணாத பொன் உலகம் உருவாகும் !
சங்கே அடங்காதே ஒரு சங்கமே உருவாகும் !
எங்கே மதிக்காத பொன் தங்கமே விலையாகும் !
போக போக வேக நெஞ்சம் விவேகமாகும் !
பழகப் பழக பாரமனமும் பலமாகும் !
போராடி போராடி வாழ்வு ஓர் தேரோட்டம் !
கல்லடி பல்லடி சொல்லுக்கு ஏன் இந்த ஆட்டம் !
மனமே சற்று நில்லு !
தினமே ஒரு சொல்லு !
இந்த காலம் நிற்காது ?
சொந்தம் பந்தம் நிலைக்காது ?
தேடல் நேரம் தேயிந்திடம் !
கடல் தினமும் படகு தேடும் ?
போன நேரம் நிலைக்காதா ?
ஏன் இந்த காலம் நிலையான பாதம்
காட்ட வில்லை ?
கண் திறந்த நேரம் பலமான பாலம்
கட்ட வில்லை ?
என்று நினைத்து நினைத்து உன் கனவை
கண்ணாடி சிலைப் போல் உடைத்து பொன்
மனதை சிதறிவிடாதே !
எதிரிகளை எதிர்த்து நின்றால் காலமோ
நம்மைப் புகழும் !
உழைப்போ உழைத்து வென்றால் புகழோ
நம்மைச் சேரும் !