மருத்துவ நேரிசை வெண்பா பாடல் 36 - மயில் கறி

மருத்துவ நேரிசை வெண்பா பாடல் 36 - மயில் கறி

சூலைப் பிடிப்புகளைச் சோரிவளி யைப்பித்த
வேலைச்சி லேட்டுமத்தை வீட்டுங்கால் – நூலொத்த
அற்பவிடை மாதே அனலா மயிலிறைச்சி
நற்பசியுண் டாக்கு நவில்.

பொருள்:

நூல் போன்ற சின்னஞ்சிறு இடையை உடைய பெண்ணே!

மயில் இறைச்சியை உண்பவர்களுக்கு உஷ்ணத்தைக் கிளப்பும். நல்ல பசியை உண்டாக்கும்.

வலி தரும் மூட்டுப் பிடிப்பு, சோரிவளி, பித்தம், அதிக கபம் இவைகளை விரட்டும்.


  • எழுதியவர் : வ.க.கன்னியப்பன்
  • நாள் : 11-May-14, 10:02 pm
  • சேர்த்தது : Dr.V.K.Kanniappan
  • பார்வை : 166
Close (X)

0 (0)
  

மேலே