என் காதலி

கிராமத்து கருப்பு அழகி
முத்தமிழ் பேச்சு அழகி
சிந்தனை சிவப்பு அழகி
என் காதலி

அவளுக்கு குழந்தை என்றால் பிடிக்கும்
காரணம் குழந்தையாய் இருப்பதால்

அவளுக்கு ஆ என்ற எழுத்து பிடிக்கும்
காரணம் ஊட்டி விடுவதால்

அவளுக்கு நாய் என்றால் பிடிக்கும்
காரணம் கடித்து விளையாடுவதால்

அவளுக்கு பாட்டு என்றால் பிடிக்கும்
காரணம் பாட தெரிவதால்

அவளுக்கு காதல் என்றால் பிடிக்கும்
காரணம் பாசம் வைக்க தெரிவதால்

அவளுக்கு கோபம் என்றால் பிடிக்கும்
காரணம் அன்பு காட்ட தெரிவதால்

அன்பு காட்ட தெரிந்த என் காதலிக்கு
என் அன்பை புரிந்து கொள்ள முடியவில்லை
காரணம் அவள் அருகில் நான் இல்லாததால்

காலம் அது விளையாடுகிறதே எங்கள் காதலில்
காரணம் அவளை நான் காதலிப்பதால்

என் காதல் அது நீர் விழ்ச்சி யாய் ஊற்று எடுத்து உருமாறுதே உடலில்
காரணம் அவள் மந்திரம் செய்வதனால்

கிருஷ்ணன் காக காத்திருந்தால் ராதை

என் ராதை காக நான் காத்திருக்கிறேன்

கிருஷ்ணனாக

எழுதியவர் : குணா (12-May-14, 12:55 am)
Tanglish : en kathali
பார்வை : 158

மேலே