அன்னையர் தின விளம்பரம் Mano Red

இது எல்லோருடைய மனதையும்
புண்படுத்தும் நோக்கம் தான்..!!

வாந்தி எடுப்பதை கூட
விளம்பரப் படுத்தும்
விந்தை உலகில்,
தாயின் அன்பைச் சொல்லி
விளம்பரம் என்பது தான் கொடுமை..!!

அன்னையின் அன்பு
ஆண்டவனை விட பெரிது,
அன்னையின் பாசம் என்பது
ஒப்பிட முடியாத வலி..!!

ஒருவேளை,
தாயின் பாசம்
வேசம் போடுவதாக இருந்தால்
அன்னையின் அன்புக்கு
இத்தகைய வெளிச்சம் தேவை தான்..!!

மாதா பிதா குரு தெய்வத்தில்
அன்னையை முதலில் வைத்த
ஆழமான காரணம்,
அவள் ஈடு இணையற்றவள்
என்பதை சொல்லத் தான்..!!

தாயின் மீது பாசம் இருப்பது
தவறல்ல ...!!
பாசத்தை நிரூபிக்க
தாயின் அன்பை
விளம்பரமாக்க வேண்டாம்..!!

இன்னும் கொஞ்ச நாளில்
தாய்ப்பாலுடன் சேர்த்து
தாய்ப்பாசத்தைக் கூட
விற்பனைக்கு கொண்டு வரும்
இந்த விளம்பர உலகம்..!!

விளம்பரம் இல்லாத
விளம்பரம் தேடாத
அன்னையர் தினம் வேண்டும்..!!
அன்னையர் தினம் மட்டுமல்ல
அன்புக்குரிய அத்தனை தினங்களும்
விளம்பரமில்லாமல் வேண்டும்..!

எழுதியவர் : மனோ ரெட் (12-May-14, 1:39 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 218

மேலே