லஞ்சம்
அவன் வாங்கும்போது நான் வாங்கக் கூடாதா?
இந்த ஒற்றைக் கேள்வியால்தான்
நாசமாய்ப் போனது நம் நாடு ...!
காலை தொடங்கி மாலை வரை
காண்பதெல்லாம் லஞ்சமென்றான பின்பு
யாரால் சிரிக்க முடியும்
கரன்சியில் காந்தியை தவிர ...!
கற்பை விற்கும் வேசிக்கும் வேசிக்கும்
கடமையை விற்கும் அதிகாரிக்கும்
பெரிதாய் வித்தியாசம் தெரியவில்லை எனக்கு ...!
தன்னை நியாயப்படுத்த
ஆயிரம் காரணம் சொன்னாலும் அது
மலம் உண்பவன் அதை மறைக்க
இது மாங்கனி என்பது போலவே ...!
சவத்திற்கு சான்றிதழ் வழங்கக் கூட
சரியான சன்மானம் கேட்க்கிறது
இந்த சமூகம் ...!
சரியான அரசு இல்லை என்று
குறை சொல்லும் நம்மில்
எத்தனை பேர் சரியானவர்கள் ...!
சாபம் யார் போட்டதோ ?
செத்துப் பிழைக்க வேண்டி இருக்கிறது
இதை மாற்ற நினைப்பவனின் நிலை
என்று மாறுமோ ...!