கருத்தில் விரிந்த மலர் காண்க 194688

காளியப்பன் எசேக்கியல் அய்யாவின் விருத்தம் என்னுள் உண்டாக்கிய உந்துதல் :

உழைத்துத்தான் களைப்பை எட்டும்
=உலகத்து மாந்தர் தாமும்
நுழைந்திட்டார் எழுத்தில் நன்றாய்
=தமிழ்க்கவியும் வடிப்ப தற்கே
பிழைகளையும் சேர்த்திக் கொண்டு
=பைந்தமிழில் கவிதை என்றார்
மழைபோல்நாம் இலக்கணம் செய்தால்
=மண்டையில் அடித்துக் கொண்டார்

கடும்பாறை மீதே நாமும்
=மழையாகப் பொழிந்தென்ன லாபம்
சுடுகனலை கையில் தூக்கி
=எடைபோடும் முட்டாள் என்பார்
வடுமீதில் எரியு கின்ற
=மருந்திடுதல் ஆறுதற் கன்றோ
விடவேண்டாம் தொடர்வோம் இந்த
=இலக்கணத்தை வீசும் செயலை

நினைப்பதை சொல்லல் அற்றார்
=இருந்தாலும் நாம்முன் வந்து
முனைப்புடனே இலக்கணம் செய்வோம்
=முத்தமிழை செழிக்கச் செய்வோம் !
கனைக்கின்ற குதிரை யைத்தான்
=கர்ஜிக்கச் சொன்னால் தான்தன்
வினைப்பயனே அதனை விட்டு
=வேறென்ன செய்யும் பாவம்

கவலையை விடுங்கள் அய்யா
=கற்றுத்தான் கொடுப்போம் நாமும்
தவறுகளையும் திருத்தச் செய்தால்
=தரணியிலே தமிழும் வாழும் !

தவறுகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்

எழுதியவர் : விவேக்பாரதி (15-May-14, 12:18 pm)
பார்வை : 199

மேலே