வெள்ளி நிலவே - நேரிசை ஆசிரியப்பா

வெள்ளி நிலவே! ஞாயிறின் பிரதி
பலிப்பாய்த் தண்ணொளி வீசும்நீ
எங்கிருந்து வருகிறாய் எனச்சொல் வாயே! 1

வெள்ளி நிலவே! உனது மென்மை
உள்ளொளியும், இனிய புன்னகையும்
எங்கள் இரவை ஒளிமயமாக் குகிறதே! 2

வெள்ளி நிலவே! எங்கள் வாழ்வின்
இறுதித் தருணம் வரையில்
தப்பாமல் வரும்உண்மைத் தோழி நீயே! 3

வெள்ளி நிலவே! மேகமென்னும் நடன
அரங்கில் நான்காணும் உன்சுழற்சி
வசீகரம் என்சொல்வேன்? மாட்சிமை மாதே! 4

வெள்ளி நிலவே! என்னருமைக் காதலியின்
வருகையைக் காணவே இரவில்
நிலவொளியில் நிற்கிறேன்! காண்ப தெங்கே? 5

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-14, 10:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 89
மேலே