வட்டமான வெள்ளிப் பௌர்ணமி - நிலைமண்டில ஆசிரியப்பா

வட்டமான வெள்ளிப் பௌர்ணமி நிலவு
இருளடர்ந்த இரவுக்கு ஒளிதர, உன்னத
ஒளிக்கற்றை கண்ட காதலர் மயங்கினரே!

கொத்தாக மேகங்கள் வெள்ளிக் கலவையாய்
மொத்தமாக வானில் ஊர்ந்து செல்ல
நிலவு வரும்போகும் எந்நாளும் மகிழ்வே!

தலைவி நிலவைப் பார்த்து இருந்து
நிலையின்றி ஓடுகின்ற நிமிடத்தை எண்ணியே
வேண்டுகிறாள் தலைவன் விரைந்து வரவே!

இதயம் துடிக்க காதலர் இருவரும்
தமைமறந்து நீண்ட நேரம் நிலவின்
எழிலில் மூழ்கி இன்புடன் தழுவினரே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-14, 11:04 pm)
பார்வை : 132

மேலே