தொலைக்காட்சி== உலக தொலைக்காட்சி தினம் இன்று

கற்பனைக் கெட்டா கலைக்கோலம் பூண்டெழுந்து
அற்புதங்கள் செய்ய அதிநவீன -நுட்பத்தால்
நொடிக்குள் உலக நடப்பை காட்டி
படிப்பூட்டும் பல்சுவை ஊற்று.

தொடர்கதையில் வாழ்வை தொலைத்தோர்க்குள்
நெஞ்சில்
படர்ந்தக் கொடிபோல் பரவி,-அடர்ந்திருக்கும்
குடத்திட்ட தீபமாய் நாம்பார்க்க வந்த
இடரன்றோ தொலைக்காட்சி இன்று.

அந்தரங்க நாடகங்கள் எல்லாம் படம்பிடிக்கும்
சுந்தர ஊடகங்கள் முன்னாலே -தொந்தரவாய்
நிற்கும் தொலைக்காட்சி நேராய் ஒளிபரப்பும்
விற்பனையில் மானம் விருந்து.

மறைமுகக் குற்ற மனிதர் இரக்கும்
துறைமுகமாம் வீட்டுத் தொலைக்காட்சி- நிறைகுடமாய்
தன்னைத்தான் காட்டித் தலைநிமிர்ந்து கொள்வதற்கே
மின்னுகின்றத் தன்மை மிடுக்கு.

பாசத்தால் நீராடும் பண்புள்ள வீட்டைஆ
பாசத்தால் நீராட்டும் பண்பில்லா- மோசங்கள்
செய்து முதன்மை வகிக்கும் தொலைக்காட்சி
கொய்கின்ற செய்தியே நன்று

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-May-14, 1:40 am)
பார்வை : 216

மேலே