வெட்டுக்கிளி 1

"வெட்டுக்கிளி"இது ஒரு வெட்டுக்கிளியை பற்றி கூறும் கதை மற்றும் என் சிறு வயதில் நடந்த ஓர் உண்மை கதையாகும்.

சரி இப்போது கதைக்குள் போகலாம்.

என் இதயத்தின் துடிப்பு அதிகமாக இருந்தது, தேர்வறையை தேடி ஓடிகொண்டிருந்தேன்.இறுதியாக தேர்வறையை கண்டுப்பிடித்து தேர்வறைக்குள் நுழைந்தேன், என்னுடன் வகுப்பில் படிக்கும் அனைவரும் அமர்ந்திருந்தனர்.என் இடத்தை கண்டுபிடித்து உட்காந்தேன்.

தேர்வுக்கான மணி அடித்ததும் அனைவரும் தேர்வெழுத துவகினர்.

ரோல் நம்பர்,நேம்,ஸ்டான்டர்,கிளாஸ்,ஸ்கூல் நேம் இவை அனைத்தையும் விடைத்தாளில் எழுதி விட்டு வினாத்தாளை பார்த்தேன்.

திடிர்யென மனதில் ஓர் சந்தேகம் எழுந்தது,

ஆமா இது நம்ப வினாதாள இல்ல நான்காம் வகுப்புக்கு பதிலாக,5ஆம்,6ஆம் வகுப்பு வினாதாளை தந்துட்டாங்கள என்று யோசித்தபடியே வினாத்தாளை பார்த்தேன்.
ஹ்ம்ம் சந்தேகமே இல்லை இது நம் வினாத்தாள்தான் இப்போது என்னசெய்வது .ஒரு வினாவுக்குகூட விடை தெரியவில்லை,படித்ததுயெதும் நினைவிலும் இல்லையே என்ற சிந்தனையில் அமர்ந்திருந்தேன்.

அப்போது என் பின்புறத்தில் அமர்ந்திருந்த தோழி ஒருத்தி என்னை அழைத்தால்.
திரும்பி கண்ஜாடையில் என்னவென்று கேட்டேன்
அவள் அவளுடைய விடைத்தாளை காட்டினால்,
நான் வேண்டாம் என தலையை அசைத்துவிட்டு திரும்பினேன்.
என் எதிரே ஆசிரியர் நின்றுகொண்டிருந்தார்.
பயத்துடன் எழுந்து நின்றேன்.
என்ன, பாத்து எழுதுறிய என்றுகேட்டபடியே ஆசிரியர் விடைத்தாளை பிடுங்கினார்
நீ எக்ஸாம் எழுத வேண்டா,நாளைக்கு உன் பெற்றோறை கூட்டிட்டு வா என்று கூறினார்.

அழுதபடியே நான் பார்த்து எழுதவில்லை என கூறி தேர்வு எழுத அனுமதிக்கும்மாறு ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன் .

திடிர்யென கண்விழித்து பார்த்தால் நான் படுகையில் படுத்து கொண்டிருந்தேன்,அப்போதுதான் புரிந்தது,,
நடந்தது அனைத்தும் கனவு என்று..
என் அருகே என் தாய் நின்றுகொண்டிருந்தார்.
எவ்வளவு நேரமா எழுப்புற எந்திரி டைம் 6.30 என்று கூறிவிட்டு என் தாய் அங்கிருந்து சென்றார்..

படுகையிலிருந்து எழுந்து எப்போதும் போல என் வீட்டு மாடிக்கு சென்று சிறிது நேரம் என் வீட்டு தோட்டத்தில் உள்ள மரம்,செடிகளையும்,சிறு தொலைவில் உள்ள ஏரியையும்,இயற்கையின் அழகையும் இரசித்துக்கொண்டிருந்தேன்..

தொடரும்....
.

எழுதியவர் : அனுரஞ்சனி (17-May-14, 8:32 pm)
பார்வை : 303

மேலே