நினைவுகள்

கடந்த நொடிகளுக்கு என்னை
கடத்திச் சென்றாய்
அந்த நொடியில்
நடந்து வந்தவனை எங்கு
கடத்தி வைத்திருக்கிறாய்?

கடந்து போனவன்
நடந்து போன தடங்களை
தடையங்களாய் தருகிறாய்
நினைவுக் கம்பிகள் கடந்து
தப்பிக்கவும் செய்கிறாய்

விடைப்பெற்றவைகள் மீண்டும்
விதை தருமோ?

முடிந்தவைகள் மீண்டும்
முகிழுமோ?

எழுதியவர் : Raymond (20-May-14, 4:40 am)
Tanglish : ninaivukal
பார்வை : 253

மேலே