மருதாணிMano Red

ஆத்தாடி பேரழகி...!!
அத்தனை நிலவையும்
அள்ளிக் கொண்டு வந்து
அத்துடன் கொஞ்சம்
அமிலம் ஊற்றி
அரங்கேறும் அவள் அழகு..!!
பெரிய போராளி அவள்,
பொதுவாகச் சொன்னால்
பொம்மைகள் காட்டும்
பொய் கோபத்தில் கூட
பொசுக்கென அழுதிடுவாள்..!!

காதலை மதிக்காதவள்,
கவிதைக்கு மட்டும்
கண்ணடித்து
கவிதையை இன்னும்
குழைத்து அழகு செய்வாள்..!!

பார்த்தவுடன்
பற்றி எரிய வைக்கும்
பழுப்பு நிற பார்வை அவளுக்கு,
பக்கம் வந்தால் போதும்
பயத்திற்கும் பயம் காட்டுவாள்..!!

அத்தனை மெல்லிய
அதிர்வலை கூந்தல் கொண்டவள்,
அய்யோ என்ன இது
அதிர்ச்சியுடன் கூடிய
அழுத்தம் பதிக்கிறாள்..!!

மெல்லிசை தோற்க
மெட்டு போடும் அவள் சிரிப்பு..!!
மேகம் கூட்டத்தையும்
மெல்ல கவர்ந்து
மேலாடை இழக்க செய்கிறாள்..!!

மிச்சமில்லாத
மச்சம் அவள் கன்னத்தில்,
பருவத்தில் வந்த
பருக்கள் கிள்ளியே
மனதில் ஒட்டிய
மருதாணி அவள்...!!

எழுதியவர் : மனோ ரெட் (20-May-14, 2:54 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 46

மேலே