சரஸ்வதி வீணை - நரியனுர் ரங்கு

தன்னானே தனதானே நானே - நான்
தண்ணியடிச்சதும் தமிழை மறந்தேனே

தன்னானே தனதானே நானே -
தாரம் வந்ததும் தாயை மறந்தவன் நானே

தள்ளாடும் கிழவன்தான் நானே
தாளம் தப்பாமல் ஆட வந்தேனே

பல்லாடி விழுந்தாலும் தானே
ராகம் பிசகாமல் படுவேன் நானே

இல்லாத ஊருக்கு எல்லாமே பாதை - யாரும்
சொல்லாத சேதியைச் சொல்ல வந்தேனே
..........தன்னானே

இமயம் முதல் குமரி வரை
இந்தியா ஒன்னு - நீ
பருத்தியும் புண்ணாக்கும்
பசி வந்தாத் தின்னு

குடிக்காதே குடிக்காதே - அது
உடம்புக்குக் கேடு - அட
காசு குடிகாரன் கொடுக்காம
நடக்குதா நாடு

குறைசொல்லக் கோயிலுக்குப் போனேன் - அங்கு
கும்பிடும் சாமியக் கூண்டோடக் காணேன்

பனைமரம் பூராவும்
தொங்குதுப் பானை - பட்டை
சாராய அடுப்பில் எரியுது
சரஸ்வதி வீணை

குடிச்சி இடுப்புல நிக்கல
இலவச வேட்டி - அவனவன்
நிலாவிலக் கால் வைக்க
போடுறான் போட்டி

சந்தி சிரிக்குது
நம்ம சாப்பாட்டுத் தானம் - அட நாம
அத்தனைப் பேருமா அலியாகிப் போனோம் - இந்த
அநியாயக் கூத்துக்கா பலியாகிப் போனோம்
தன்னானே தனதானே நானே - நான்

நரியனுர் ரங்கு - 9442090468

எழுதியவர் : நரியனுர் ரங்கு (20-May-14, 5:26 pm)
பார்வை : 59

மேலே