விளிப்பும்-விழிப்பும் –பொள்ளாச்சி அபி

“தெய்வமே..” என்று
அவன் அழைத்தபோது
எனக்கு அவன் பக்தன்.

“எசமானே..!”என்று
அவன் அழைத்தபோது,
எனக்கு அவன் அடிமை.!

“அய்யா..!” என்று
அவன் அழைத்தபோது
எனக்கு அவன் சிறியவன்.!

“ஆசானே..! என்று
அவன் அழைத்தபோது
எனக்கு அவன் மாணவன்.!

“முதலாளி..”என்று
அவன் அழைத்தபோது
எனக்கு அவன் தொழிலாளி..!

நாளும் சந்தித்த
உயர்நிலை விளிப்புகள்,
என்னை
கர்வ மலைகளில்
குடியேற்றிக் கொண்டிருந்தது.!

திடீரென்று..,ஒருநாள்
“தோழரே..”என்று அவன்
விளிக்க..,
நான் அவனுக்கு
சமமாய்..
அப்போதுமுதல்
மனிதனானேன்.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (22-May-14, 11:09 am)
பார்வை : 158

மேலே