கரிசல் காட்டு பறவை எங்கே

காலமாற்றம் -
நவீனத்தில் மூழ்கிப்போன நாகரீகம்
கூரைகளை சூறையாடிவிட்ட
கோடி கோபுரங்கள் .........

விலை நிலம் எல்லாம்
விலையாகி போய்விட
விளைச்சல்கள் குறைந்து
வீழ்ந்த பறவைகள் கூட்டம் ......

சோளமும் வரகும்
கம்பும் நெல்லும் என
உண்டு உறவாடிக்கொண்டிருந்த
உன்னத பறவைகள் ..........

சிட்டு மைனா
மணிப்புறா கவுதாரி கல்லுருட்டி
என நீண்டுகொண்டிருக்கிறது
மாண்ட பறவைகளின் பட்டியல் .......

மனிதன் இந்த பூமியை
தனக்குமட்டும் என
நினைத்துக் கொண்டதாலாயோ என்னவோ
மற்ற இனங்கள் மண்ணோடு போய்விட்டன ......

துணிந்து போராட தைரியமில்லாதவன்
ஆயுதத்தோடு போராடி
அபகரித்துக்கொண்டான் பூமிய
வேதனையில் மற்றவைகள் ........

கூடு கட்டி குஞ்சுபொரித்து
குடும்பமாய் வாழ்ந்த
பறவைகள் திசை தெரியாமல்
எங்கோ .........

கரிசல்காட்டு பறவைகளை
இனி கண்காட்சியில் மட்டும்தான்
பார்க்கமுடியுமோ -
அய்யகோ வேதனை விம்முகிறது ......

எழுதியவர் : வினாயகமுருகன் (23-May-14, 4:01 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 88

மேலே