வெளிச்சம் 5

நுரையீரல் நமக்கு மிக முக்கிய உறுப்பு. நம் உடலுக்கு தேவையான ஆற்றலில் ஒருபகுதி நுரையிரலின் வழியாகவே கிடைக்கிறது. நம் நுரையீரல் எவளவு காற்றை உள்வாங்கி கொள்கிறதோ அவ்வளவு சுருஸ்ருப்பக இருக்க முடிகிறது. இதனாலேயே பெரும்பாலான யோகா உடற்பயிற்சிகள் மூச்சை மையமாக கொண்டுள்ளது. அப்படி முக்கியம்வாய்ந்த அந்த நுரையீரலை நாம் எப்படியெல்லாமோ பாடுபடுத்துகிறோம்.சிலர் தெரிந்தே சிலர் தெரியாமலே.தெரிந்து செய்வவர்களை விட்டுவிடுவோம்.தெரியாமல் செய்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் தெரியாத பகுதியும் இருக்கிறது அவற்றைப்பற்றி இங்கு காண்போம்.
இறைவழிபாடு என்கிற பெயரில் பல்வேறு வேடிக்கை நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முடியும். அவற்றில் ஓன்று தான் சாம்பிராணி போடுதல். சிலர் சாம்பிராணி போடுகிறோம் என்ற பெயரில் புகைமண்டலதையே கிளப்பிவிடுவார்கள். செல வீடுகெல்லம் போய்விட்டு நான் ஓடியே வந்திருக்கிறேன் அந்தளவுக்கு புகைபோடுவார்கள் . சிலரிடம் நான் கேட்டதும் உண்டு ஏன் இவ்வளவு சாம்பிராணி போடுகிறீர்கள் என்று அதற்க்கு அவர்கள் அப்பொழுதுதான் இறை நினைப்பு வருகிறது என்கின்றனர். உண்மை என்னவெனில் நாம் பஞ்ச பூத வழிபாட்டிற்கு தான் சாம்பிராணி ஊதுபத்தி போன்றவற்றை பயன்படுத்துகிறோம். நெருப்புக்கு விளக்கு ஏற்றுகிறோம் நீருக்கு குவளையில் சிறிது நீர் வைக்கிறோம் காற்றுக்கு சாம்பிராணி ஊதுபத்தி பயன்படுத்துகிறோம் .இதில் ஊதுபத்தி இப்பொழுது வந்த பழக்கம். ஆனால் உண்மை என்ன வெனில் காற்று எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பதால் நாம் ஊதுபதியோ சாம்பிராநியோ பயன்படுத்த தேவை இல்லை. அதிகமாக மலர்களை பயன்படுத்தலாம். அது நல்ல உணர்வை தரும் வாசனைக்கு கூட பயன்படும். தேவை இல்லாத புகைகளால் நுரையீரலில் உள்ள சின்ன சின்ன துளைகளை நிரப்பி நாம் எடுத்துக்கொள்ளும் பிராண வாயுவை குறைத்துக்கொல்லாதிர்கள் . உடலே ஆன்மீகத்தின் அடித்தளம். உடலின்றி உயிரே இல்லை. பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியாதவர்கள் அளவாய் பயன்படுத்துங்கள் அளவுக்கு மிஞ்சினாலே ஆபத்துதான்
தொடரும் .................

எழுதியவர் : மா.காளிதாஸ் (24-May-14, 8:43 pm)
பார்வை : 85

மேலே