தேடும் விழி எனது 555

என்னவளே...

நான் மழையில்
நனைந்த போது...

உன் துப்பட்டாவால்
என் தலை துடைத்தாய்...

என் கண்கள்
அழுதபோது...

என் கண்ணீர் துளிகளை
உன் கரங்களில் ஏந்தினாய்...

அவள் என்னை
நேசிக்கிறாள் என்று...

அவள் காதலை என்னிடம்
சொல்ல வந்தாய்...

நான் உன்னை சுவாசிக்கிறேன்
என்று தெரியாமல்...

சொல்லடி கண்ணே...

அவள் காதலை ஏற்கவா...?

உன்னையே சுவாசிகவா...?

படபடக்கும் என் இதயத்திற்கு
ஆறுதல் சொல்லடி...

தடுமாறும் என்
உள்ளத்திற்கு...

முற்று புள்ளி
வைத்து செல்லடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-May-14, 3:31 pm)
பார்வை : 431

மேலே