நீர்வீழ்ச்சி

ஆழியில் கருவாகி
ஆகாயத்தில் உருவாகி
மலையில் தவழ்ந்து
காடுகளில் நடை பயின்று
மரமதில் துள்ளியோடி
ஆழி தாயை காணாது
ஆண்டவன் மேல்
வெறுப்புற்று
நதியானவள்
கொண்ட தற்கொலை முயற்சி....


முடிவு வெற்றி நதிக்கே..
தாயிடம் கலந்தது.....

எழுதியவர் : ச.கே.murugavel (26-May-14, 9:00 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
Tanglish : neerveelchi
பார்வை : 806

மேலே