நல்மனதாய் வாழ்வோம்

சுயநலம் கொண்டு சேர்த்ததை
வையமதில் ஆழ..
உயிர்தனை துறைக்காத
உடலுண்டோ இவ்வுலகில்..

உயிர் வாசம் உடல் வெறுத்து
போகின்ற நாள் வரின்..
மாண்புமிகு உடலுமங்கு
துர்நாற்றமிகு மண்சேர் பிண்டமே..

உடல் கழிவு சேராது தினமிங்கு
வெளியேற்ற முனயுமுயிர் மனம்
மனக்கழிவு கொண்டுதினம்
வாழ்வதுதான் மனிதயமோ ..

தன் பசிதீர உண்ணும்
எவ்வுயிரினமும் இரைதனை
பிறவுயிரினங்கள் புசித்தாக
விட்டுசெல்லும் இவ்வுலகில்...

பசிக்காத வேளைபல உண்டபின்பு
பசியென்ற உணர்வங்கு மறந்திடினும்
எஞ்சியதை மண்சேர்க்கும் மனிதனிங்கு
ஏழை உயிர்காக்க உணவளிக்காதிருப்பதேனோ..

சந்தர்ப்ப சாயம் பூசி நமக்கென்றும்
இருமுகங்கள் உண்டாயின் இன்றே
அன்பின் வெளிச்சமதில் பொய்முகம்தனை
களைந்திடுவோம் நல்மனமுவர்ந்து..

நம் கெட்டகுணம் திருத்திவாழ
ஒரு நல்ல மனம் வருவதுண்டு அன்றி
நல்மனதாய் வேடமிட்டு வெளிக்கொணரா
கெட்டகுணம் ஒருநாள் தன் நிஜம்காட்ட
நல்லன்பின் உயிரும் பிரிந்து போகும் தூரமாக...

சுயநலம் மனிதநேயத்தை கொன்றிடாது
நன்மை செய்யும் மனம் நம்மில்கொண்டு
என்றும் பிறர் வாழ்வினிக்க வாழ்வோம்
இவ்வையம் வாழும் காலம் வரை..

...கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (27-May-14, 4:05 am)
பார்வை : 93

மேலே