மெழுகுவத்தி

இப்படியும்....

ஒற்றை விழிச் சுடரால்,
உந்தன் ஓரக் கண்ணில் மெழுகு
வழிவதை கண்டேன்...

மேனி உருகி அழுகிறாய்!
கண் துடைக்கும் விரலைச் சுடுகிறாய்!!

நீ என்ன எரிமலை மகளா?
தீக் கண்ணீர் வடிக்கிறாய்!

உன் தலையில் நெருப்பள்ளிக் கொட்டியவனை,
நினைந்து நினைந்து பார்க்கிறாய்,
உளம் கறைந்து கறைந்து தேய்கிறாய்,
உடல் மெலிந்து மெலிந்து மறைகிறாய்,
உயிர்... விடுகிறாய்...


... இப்படியும் ஒரு வேடிக்கை மகள்!


அப்படியும்....

ஒளிபடைத்த கண்ணினாய்!
நீ, இருட்டை கிழிக்கும் நெருப்பைத் தாங்கினாய்!

மெழுகாய் உருகிப் போகிறாய், பின்
மெழுகாய் மீண்டும் மெதுவாய் எழுகிறாய்,
எங்கள் வீட்டில் வளரும் Phoenix-பறவை நீ!

யாரை எண்ணி தவமிருக்கிறாயோ?
ஒற்றைக் காலில் நிற்கும் அக்கினிக் குஞ்சே!


உன் ஈரம் மிக்க நெஞ்சு,

நெகிழ்ந்து மெழுகாய் போனாலும்...
உன் வீரம் மிக்க நெஞ்சு,
மீண்டும் நெருப்பைத் தாங்கி நிற்கும்!


... என்னே ஒரு விந்தை மகள்!!

(கலப்பைச் சுமப்பாள், கர்ப்பும் சுமப்பாள் பெண்... ஈரம் மிக்கவள், படு தீரம் மிக்கவள் பெண்.. வல்லினமும் ('பெ') மெல்லினமும் ('ண்'') சேர்ந்தது தானே 'பெண்' இனம்.'!

'இப்படியும், அப்படியும்' பெண்களைச் சந்தித்திருப்போம், சந்திப்போம்! மெழுகுவத்தியாய் உருவகப் படுத்தப்பட்டிருப்பது பெண் - இப்போது மீண்டும் படிக்க..)

எழுதியவர் : வைரன் (27-May-14, 6:28 pm)
Tanglish : meluguvaththi
பார்வை : 1243

மேலே