வாழ்ந்து பார்கிறேன் மண்ணோடு உன் நினைவில் 555

உயிரே...

வளைந்து ஓடும் நதிகள்
கூட கடலில் முடியும்...

உன் நினைவு என்னில்
முடியவில்லை...

காற்றாட்டு
வெள்ளம் கூட...

மழை வந்தால்
மட்டுமே வரும்...

உன் நினவு வரும் போதெல்லாம்
என்னில் மழைதான்...

உருகும்
பனிக்கட்டியால்...

கங்கை ஓயாமல்
ஓடிகொண்டே இருக்கிறது...

உருகும் என்
இதயத்தால்...

என் கண்ணீர் கங்கை
ஓயாமல் ஓடுதடி...

என் இதய துடிப்பு
நிற்கும் வரை...

உன் நினைவு அலைகள்
என்றும் ஓயாமல் ஓடுமடி...

என்னில் முடிவில்லாத
என் பயணமும்...

முடியாத உன்
நினைவுகளும்...

என்னில் ஓயாமல்
தொடருமடி...

கண்ணே என்னோடு
நீ இல்லை என்றாலும்...

எனக்கு
சந்தோசம்தானடி...

உன் நினைவு
என்னுடன் இருகிறதே...

உன் நினைவில் நான்
நீந்துவதர்காகவே...

மரணத்தை நான்
வெறுக்கிறேனடி...

வாழ்ந்து பார்கிறேன்
மண்ணோடு...

உன் நினைவில் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (28-May-14, 4:09 pm)
பார்வை : 319

மேலே