காதல் என்றால் காயம் இருக்கும்
அண்ணனின் அடி உதை..
அப்பாவின் திட்டல் ...
இதயத்தை காய படுத்தும்
அக்காவின் வார்த்தை ...
வயது வரம்பில்லாமல்
தம்பியின் கிண்டல் ....!!!
அழுது அழுது கண்வீக்கம்
அம்மாவின் அன்பு -இடையே
சூடானகதை ...வார்த்தைகள் ...
இதையெல்லாம் மறந்துவிட்டு ...!!!
என்னை
கண்டவுடன் பூரண சந்திர சிரிப்பு ..!
எப்படி உன்னால் மட்டும் முடிகிறது ..!
உயிரே இத்தனை துன்பமும்
என்னை நீ காதல் செய்ததே ...!!!
அத்தனைக்கும் என்னை
மன்னித்து விடு ... உயிரே ...!!!
அத்தனை துன்பமும் நீங்கும்
நாம் இணையும் காலம் அண்மித்து
விட்டது இதய தேவதையே ...!!!