நிறை மனதே நிம்மதி காணும்
நம் மனதின்
வார்த்தைகளை
வரிகளாக்க
வான் நீளம்
போதாது..
நம் தேடல்
கனவுகளை
நிஜமாக்க
வாழ் நாளும்
போதாது..
நம் எண்ணஉணர்வின்
விளம்புதல்களை
பொறுத்துக்கொள்ள
மனித பொறுமையும்
போதாது..
நம் இன்ப
வாழ்க்கைகளை
சரணடைந்து
துன்பம்மீளும் நாட்களும்
போதாது...
நம் உயிர்இழப்பை
ஈடுகொள்ள
இவ்வையம் கொடுக்கும்
வள்ளல் கோடி
போதாது...
நம் பிறப்பிறப்பை
குறித்துக்கொள்ளும்
கடவுள் நியதிகளை
மாற்றி எழுத மனிதயியல்பு
போதாது..
நம் உறவில் யாவும்
அழகாய் தெரிய
பொருள் சேர்க்கும்
செல்வம் மட்டும்
போதாது..
நம் வாழ்வில்
வலியும் இழப்பும்
போதுமென்று சொல்லின்
அதற்கான அன்பும் ஈதலும்
நமக்குள் இன்றும்
போதாது..
நம் உடல்
மண் மிதந்து மண் புதையும்
நாள் வரையில் நமக்குள்
போதுமென்ற திருப்திவரும்வரையில்
உலகில் எதுவும்
போதாது...போதாது....போதாது...
...கவிபாரதி...