காதல் சொல்லி தருகிறேன்

காதல் என்ற சொல்லுக்கு அன்பு என்று பெயர் உண்டு
அன்பு என்ற சொல்லிலே இன்பம் நிறைய உண்டு

இன்பம் காண ஆசை இருந்தால் அன்பு செலுத்த வா
அன்பு செலுத்தும் முன் பாத்திரம் அறிந்து போ

நேர்மை ஒன்றை நம்பிக்கை ரெண்டை எடுத்து போ
அவன் கஷ்டத்தில் நீ இருக்க நினைத்து போ

சண்டைகளை சின்னதாகி செல்ல சண்டை போடு
காதல் தாண்டி திருமண படி ஏறி காதல் நடை போடு

அவள் மடியில் நீயும் உறங்கிவிடு குழந்தையாய்
மடியில் இருப்பவனை தாழாட்டிவிடு தாய்யாய்

சந்தேகத்தை தூக்கி எறிந்துவிடு தூரமாய்
அது வராவண்ணம் நடந்துவிடு நல்ல பிள்ளையாய்

வேலைகளை போட்டியாய் செவ்வன செய்யுங்கள்
மனதிலே ஒருவரையொருவர் வையுங்கள்

முத்தங்களை பரிசாக மட்டும் கொடுங்கள்
முத்தங்களை பரிசாக மட்டும் கேளுங்கள்

முயற்சி செய்து வாங்கும் முத்தத்திற்கு உண்டு ஆயிரம் சத்தம்
கேட்டதும் வாங்கும் முத்தத்திற்கு உண்டு ஒரேஒரு
சத்தம்

ஆண்களுக்கு பிடித்தது அம்மா
அவர்களுடன் சண்டை போடாதே சும்மா

உறவுக்கு பாலம் கட்டு உடலுறவால்
அதில் நித்தம் ஓடு அன்பினால்

சிறுக சிறுக நீ செலுத்தும் அன்பு
மொத்தமாய் சேர்ந்து வரும் பின்பு

வளைந்து வளைந்து தூரம் செல்லும் வண்டி போல்
வளைந்து கொடுத்து செல்லுங்கள்

அன்பிற்கு இல்லை தாழ்பாள்
அறிவுக்கு இல்லை எல்லை
வயற்றுக்கு உண்டு பசி
அதுபோல் ஒருவரையொருவர் நேசி
அதையே சுவாசமாய் சுவாசி

காற்று அது தீர்ந்து போகது
உங்கள் காதலும் அப்படித்தான்

எழுதியவர் : குணா (29-May-14, 8:01 am)
பார்வை : 121

மேலே