இரவு கவிதையாகிறது

காமத்துப் பாலை
கண்களில் காட்டியவனே
காதலால் ஊட்டியவனே
பொழுதுகள் எல்லாம்
மோகத் தொழுகை
காம தேவன் முன்
என் காதல் தேவன் அரங்கேற்றம்...

சாமம் சாய்ந்து கிடக்கிறது
தேகமும் தோய்ந்து மிதக்கிறது
நம் தேகம் தூரம் போக
வேகம் குறைத்ததா நேரம்?

நம் எண்ணங்கள் உரசியதில்
பூட்டிய அறையில்
பூங்காற்றுக்குள் சரசம்
ஆண் காற்றும்
பெண் காற்றும்
மென்காற்றாகி
விளையாடத் தொடங்கிவிட்டன
சோராமல் நாம் இருக்க
வேர்க்காமல் அவை வீசுகின்றன

என் விரல் இடையில்
தேன் கூட்டை
உன் இதழ் வண்டுகள்
கண்டு கொண்டது எப்படி?

பூக்களில் எங்கிருந்து தொடங்குவது
என்றே வண்டுகள் வட்டமிடுவது போல்
உன் கண்கள் என்னை
வட்டமிட்டது போதும்
பூத்துக் கிடப்பது
உனக்கு பூஜை செய்யவே

உன் முத்த சத்தத்தால்
வானில் யுத்தம்
இரவு தாண்டி
நம் கதவு அடைய
கதிரவன் கதறல்
கலைத்துவிடாதே கலையை
என நிலவின் சுயநலம்

தீ எரிகிறதா
என் தேகம் எரிகிறதா
எரித்தது போதும்

என் உறுப்பு அறைகள் எல்லாம்
உன் தேகத் தூப ஆராதனை
மந்திரத்தை நீ முனங்க
அருளை அள்ளித் தருகிறது
இந்த இருள்
காம தேவனின் சோம பானமாய் நான்
இறுதித் துளியும் உன் இதழில் தான்

உச்சத்தில்
எது இன்னும் மிச்சம்?

பட்டினி கிடந்தவன் தின்றான்

இருவரின் தாகமும்
தேகத்தில் தான்
அடங்கும் வரை
அள்ளிக் குடிப்போம்

பனித்துளியை
பகலவன் சுடும் விடியலில்
இரவின் சூடு புரியும்

உன் தீண்டல்
கூரை தாண்டியதில்
முகில் முணங்குகிறது
வானம் நானுகிறது
விண்மீன்கள் வியர்க்கிறது
அடடா இயற்கை வியக்கிறது..!

உன் வித்தையால்
மெத்தையும் வாய் முளைத்து கத்துகிறது
கட்டிலுக்கும்
கை கால் முளைத்து விடும் போலும்
தொட்டிலுக்கும் வேளை
இது தான் போலும்

ஊடச் சென்றது மறந்து
கூடச் சென்றது
இதை பாடச் செய்தது
இரவை கவிதையாக்கியது ..!

எழுதியவர் : Raymond (30-May-14, 2:53 am)
பார்வை : 482

மேலே