இடி

இடியின்
இடையில்,
மின்னும்
மழைத்துளி....

இடி இடிக்கத்
துவங்கிய பின்
பேய் மழை,
ஒன்றுமில்லை....

மேகத்தின்
மோகத் தீ
இடியானது....

மேகத்தின்
பாலம்
உடைந்து தவறி
விழுந்தவை,
இடியானது....

விழுந்தது இடி
பற்றிக் கொண்டது
பச்சை வாழை
பார்த்த பத்தினி
முகம் விரிந்தாள்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (2-Jun-14, 5:00 pm)
Tanglish : idi
பார்வை : 111

மேலே