காரணம்

ஒருவன்
தெரியாமல்
என் காலை
மிதித்து விட்டான் !

மன்னிப்புக் கோரியவனை
விட்டிருக்கலாம் !
பிலுபிலு என்று
பிடித்துக்கொண்டேன் !

கூட்டம்
ஒருகணம்
ஸ்தம்பித்தது !

மிதத்தவன்
முகத்தில்
ஈயாடவில்லை !

ஆனாலும்
நான் விடவில்லை !

யாவரும்
என்னை
ஒருமாதிரிப் பார்க்க

நான்
முனகிக்கொண்டே
அப்பால்
நகர்ந்து போனேன்,
என் தனிமையெனும்
வெம்மை தணிக்க
அந்த
லௌகிகச் சேற்றில்
கொஞ்சநேரம்
தலை நனைத்து
ஈரம் பெற்ற
அற்ப நிறைவோடு !


- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (4-Jun-14, 12:09 am)
பார்வை : 103

மேலே