மாறாதடி இந்த வடு காதலியே

மாறாதடி இந்த வடு -காதலியே !
----------------------
தங்க நிறமல்ல என் காதலி ,!
தளுக்கு நடை கொண்டவளும் அல்ல,
அங்க கவர்சியும்
அறிதாகவே கொண்டவள் !
அழகென்று சொல்லவும் முடியாது !

ஆனால்
மங்கிய நிலவில் பார்தால்
மலர்ந்த முகம் அழகாக தெரியும்
மதியை மயக்க வைக்கும் !

பின் ஏன் நான் மயங்கினேன்
அந்த இளம் வயதில் ?
கண்கள் களங்க மில்லா
பாலை போன்று இருந்ததாலா ?
கார் கூந்தல் ஏர் கூந்தலாக
நிலத்தினை தொட்டதினாளா ?
முத்துபல் சிரிப்பு
முல்லை பூ தொடுத்ததாலா ?
இதழ் விரித்த புண்ணகை
இதயத்தை தொட்டதாலா ?
இல்லை இல்லை
இதில் எதுவுமே இல்லையடி உயிரே!

உன்
கண்ணில் கண்ட ஒளிவீச்சு
கருத்தில் தெரிந்த நற்பேச்சு
ஒருபக்கம்
நான் கவிஞானக
நல்ல எழுத்தாளானாக
நீ அளித்த ஊக்கம்
நான் உயர நீ தவித்த ஏக்கம்
எல்லாம் தான் உன்னை
என் காதலியாக்கியது
ஆனால் என் வாழ்க்கைகாக
உன் வாழ்க்கையினை
நீ மறந்து துறந்தபோது
நீ கடவுளாகவும்
நான் கடைந்தெடுத்த
பேடியாகவும் அல்லவா மாறிபோனேன்
மாறாதடி இந்த வடு !

விருப்பம்விருப்பம் · · பகிர்

எழுதியவர் : (4-Jun-14, 9:28 am)
பார்வை : 72

மேலே