மனம் திருந்தியவனின் மரணம்

யார் கையில்
விரல்
யார் கையில்
தோட்டா....?
விரல் துடித்து
விழியாகி தவிக்க
குருதி குடித்த
தோட்டாவின்
தொடர் சிந்தனையில்
மாலையாகி
மாட்டப்பட்டிருக்கிறது
நாளை மரணிப்பவனின்
புகைப்படம்...
புகைப்படம்
அடித்திருப்பது
தோட்டா தவறவிட்ட
விரல்களில்....
கவிஜி